tamilnadu

img

4 மாத குழந்தையை இழந்த தாய் மீண்டும் போராட்டக்களத்தில்!

‘ஷாகீன் பாக்’கில் நெகிழ்ச்சி சம்பவம்

புதுதில்லி, பிப்.5- குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக, தில்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்துக்கு அருகில் உள்ள ‘ஷாகீன் பாக்’ பகுதியில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆயிரக்க ணக்கான பெண்கள் இந்த போராட்டத்தில் பங் கேற்று வருகின்றனர். கடுமையான குளிரையும் பொருட்படுத்தாமல் இளம்பெண்கள், முதியவர்கள் என வயது வித்தி யாசம் இல்லாமல் அனைவரும் இரவு- பகலாக கலந்துகொண்டுள்ள இந்தப் போராட்டம் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக, இந்த போராட்டத்தில் நசியா என்பவரும் அவரது 4 மாத ஆண்குழந்தை ஜஹான் கானும் பலரது கவனத்தை ஈர்த்தனர். வாட்டி வதைக்கும் குளிரில் இந்த குழந்தையும் போராட் டத்தில் பங்கேற்று தேசியக் கொடியை கையில் ஏந்தியது அண்மையில் இணையத்தில் வைரலா னது. 

இதனிடையே, கடந்த ஜனவரி 30-ஆம் தேதி இரவு போராட்டக்களத்தில் இருந்து வீடு திரும்பிய நசியா குழந்தையை உறங்க வைத்துவிட்டு தானும் தூங்கியுள்ளார். ஆனால், காலையில் எழுந்து பார்த்தபோது, குழந்தை மூச்சு பேச்சின்றி கிடந்துள் ளது. அதிர்ச்சி அடைந்த நசியாவும், அவரது கண வர் ஆரிப்பும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், பனியின் காரணமாக கடுமை யான காய்ச்சலுக்கு ஆளான குழந்தை ஏற்கெ னவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது நசியா மற்றும் ஆரிப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. எனினும் இதனை அவர்கள் யாரிடமும் சொல்லவில்லை. தங்க ளுக்கு உள்ளேயே சோகத்தை வைத்துக் கொண்டனர். இந்நிலையில், குழந்தை ஜஹான்கான் இறந்து ஒருவாரம் மட்டுமே ஆன நிலையில், அக்குழந்தையின் தாயார் நசியா, வழக்கம்போல ‘ஷாகீன் பாக்’ போராட்டத்திற்கு வந்துள்ளார். அப்போது, குழந்தை ஜஹான்கான் எங்கே? என்று அங்கிருந்தவர்கள் கேட்டுள்ளனர். அப்போதுதான், ‘இனி ஜஹான் வரமாட்டான்’ என உருக்கமாக நசியா கூறியிருக்கிறார். இதைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். மேலும் சோகத்தை வெளிக்காட்டாமல், மீண்டும் போராட் டக்களத்திற்கு வந்த நசியாவின் கைகளைப் பிடித்து, தங்களின் நட்பையும், ஆறுதலையும் தெரிவித்துள்ளனர்.