தில்லி
கொரோனா அச்சத்திற்கு இடையே நாட்டின் வட மாநிலங்களில் அடிக்கடி நில அதிர்வு ஏற்பட்டு வருகிறது. கடந்த வாரம் காஷ்மீர் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், ஞாயிறன்று மாலை தில்லி வசிராபாத் பகுதியில் 3.5 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக வீடுகளுக்குள் முடங்கியிருந்த மக்கள் அலறி அடித்து வெளியே ஓடிவந்து சிலநேரம் வீதியிலேயே சிறிது உலாவிச் சென்றனர்.
இந்நிலையில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று மதியம் சுமார் 1:30 மணியளவில் தில்லியின் மத்திய பகுதியில் 2.7 ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் உணரப்பட்டதால் தில்லி வாசிகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.