world

img

அமெரிக்காவில் மீண்டும் கொரோனா ஆதிக்கம்..  தினசரி பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டியது...    

வாஷிங்டன்
அமெரிக்காவில் கொரோனா 2-வது அலை கடந்த மே மாதம் கடைசி வாரத்தில் இறங்கு வரிசையில் இறங்கியது. அதாவது தினசரி பாதிப்பு 50 ஆயிரத்துக்கு கீழே இறங்கியது. தடுப்பூசி செலுத்திக்கொண்ட மக்கள் முககவசம் இன்றி வழக்கம் போல வெளியே நடமாடினர். 

இதனால் அமெரிக்கா இயல்பு நிலைக்கு திரும்பியது என உலக நாடுகள் ஆச்சரியத்துடன் பேசிக்கொண்ட நிலையில், கடந்த 3 நாட்களாக அங்கு மீண்டும் கொரோனா பரவல் தலைதூக்கியுள்ளது. 31 நாட்களுக்கு பின்னர் அங்கு தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது.  மூன்றாவது அலையின் புதிய உச்சமாக கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 35 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ள நிலையில், 374 பேர் பலியாகியுள்ளார். 

தற்போது அமெரிக்காவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் வகைளில் இந்திய வகையான டெல்டா வைரஸ் வகை அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது. அமெரிக்காவில் மீண்டும் கொரோனா ஆதிக்கம் உலக நாடுகளில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.