tamilnadu

img

தில்லி கலவரம் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு -தேர்வுகள் தள்ளிவைப்பு

தில்லி கலவரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. இந்த சூழலில் தில்லியில் நடைபெற இருந்த சிபிஎஸ்இ தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

இந்திய மக்களை மதரீதியில் பிளவுபடுத்தும் வகையில் மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத் திற்கு(சிஏஏ) எதிராக தில்லியில் போராடியவர்கள் மீது, அச்சட்டத்தை ஆதரிப்பவர்கள் என்ற பெயரில் ஆர்எஸ்எஸ்- பாஜக மதவெறிக் கும்பல்கள் நடத்திய தாக்குதல் மற்றும் மோதலில் பலியானோர் எண் ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. 

 வடகிழக்கு தில்லியின் ஜாஃப்ரா பாத், மௌஜ்பூர், பஜன்புரா, சந்த்பாக் பகுதிகளில் குடியுரிமை திருத்தச் சட் டத்துக்கு (சிஏஏ) எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இச்சட்டத்தை ஆதரித்து ஆர்எஸ்எஸ் - பாஜக கும்பல்கள் பேரணி நடத்தி, எதிர்ப்பு போராட்டம் நடத்தியவர்கள் மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்தினர். இதில் தலை மைக் காவலர் உட்பட 7 பேர் வரை உயிரிழந்திருந்தனர்.  இந்நிலையில் இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 20 ஆக அதி கரித்துள்ளது.  
இதை அடுத்து தில்லி உயர் நீதிமன்றம் தேர்வுகளை தள்ளி வைப்பது குறித்து விரைந்து முடிவெடுக்குமாறு சிபிஎஸ்இ அறிவுறுத்தியது இதற்கிடையே பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று ஆங்கில தேர்வு பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வெப் அப்ளிகேஷன் மற்றும் மீடியா தேர்வும் நடைபெறுவதாக இருந்தது இந்நிலையில் வடகிழக்கு டெல்லியில் பொதுத்தேர்வுகளை தள்ளி வைப்பதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது இதுகுறித்து சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள அறிக்கையில் கல்வி இயக்குனரகம் மற்றும் தில்லி அரசின் வேண்டுகோளை முன்னிட்டு மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் அசௌகரியங்களை தவிர்க்க 26.2.2020 அன்று டில்லியின் வடகிழக்கு பகுதியில் நடைபெற இருந்த பொதுத் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் மற்ற பகுதிகளில் தேர்வு வழக்கம்போல் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது எந்த தேர்வு மையங்களில் தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளன என்பது குறித்து www.cbsc.nic.in விவரங்கள் என்ற இணையதளத்தில் வெளியிட வெளியாகியுள்ளது
 

;