tamilnadu

img

சரியான நேரத்தில்தான் தில்லி தாக்குதல் நடந்துள்ளது... இமாச்சல் பாஜக எம்எல்ஏ வெறிப்பேச்சு

சிம்லா:
குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்துவோர் மீது சரியான நேரத்தில்தான் தாக்குதல் நடந்துள்ளதாக இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் பாஜக முதல்வர் ஜெய்ராம் தாக்குர் பேசியுள்ளார்.இமாச்சல் மாநில பட்ஜெட் தாக்கலுக்குப் பின், ஜெய்ராம் தாக்குர் செய்தியாளர்களுக்குப் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், டிரம்ப் வந்துள்ளநேரத்தில் தில்லியில் வன்முறை நடந் துள்ளதே..? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு,“இந்தியாவுக்கு எதிரான மனநிலையுடன் செயல்படுபவர்களை ‘டீல்’ செய்யஇதுதான் சரியான நேரம்” என்று தாக்குர்கூறியுள்ளார்.

அத்துடன், “பாரத் மாதா கீ ஜே என்றுகூறுபவர்கள் இந்தியாவில் இருக்கலாம்; யாரால் அதனைச் சொல்ல முடியாமல் போகின்றதோ, யார் இந்தியாவைஎதிர்க்கின்றார்களோ, யார் இந்திய அரசியல் சாசனத்தை மதிக்காமல் மீண்டும்மீண்டும் நடந்து கொள்கின்றார்களோ, அவர்கள் குறித்து நாம் யோசனை செய்யவேண்டிய நிலை உருவாகியுள்ளது” என்றும் கூறியுள்ளார்.அவரின் இந்தப் பேச்சுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்எல்ஏ ராகேஷ் சின்கா, காங்கிரஸ் கட்சி தலைவர் குல்தீப் ரத்தோர் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். “தன்னை இந்தநாட்டின் தேச பக்தர்கள் (Desh Premi) என்று கூறுபவர்கள் (ஆர்எஸ்எஸ் -பாஜகவினர்)-தான் இந்தியாவின் ஒற்றுமையை சீர்குலைப்பவர்கள்” என்று ராகேஷ் சின்கா சாடியுள்ளார்.

;