tamilnadu

img

குறைந்து கொண்டே போகும் கோடைக்கால வேளாண்மை

புதுதில்லி:
இந்திய விவசாயிகளின் கோடைக்கால வேளாண் செயல்பாடு, ஆண்டுக்காண்டு குறைந்து கொண்டே வருவதாக, மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.ஒவ்வொரு ஆண்டும் சுமார் 9 சதவிகிதம் என்ற அளவில் இந்தவேளாண் செயல்பாடு குறைவதாகவும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.“கடந்த ஆண்டு கோடையில் 11 மில்லியன் ஹெக்டேர் பரப்பில்பயிரிடப்பட்ட நெற்பயிர், இந்தாண்டு 9.8 மில்லியன்ஹெக்டேர் அளவாக குறைந்துள்ளது. இதேபோல, பருப்பு வகைகள் மற்றும் கரும்புசாகுபடியும் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு 6.4 மில்லியன் ஹெக்டேரில்பயிரிடப்பட்ட சோயா பீன்ஸ், 5.2 மில்லியன் ஹெக்டேராக குறைந் துள்ளது” என்று மத்திய வேளாண் அமைச்சகம் புள்ளிவிவரம் அளித்துள்ளது.4.1 மில்லியன் ஹெக்டேரில் பயிரிடப்பட்ட  மக்காச் சோளம், 7.8. மில்லியன் ஹெக்டேரில் பயிரிடப்பட்ட பருத்தி ஆகியவற்றின் சாகுபடிபரப்பில் மட்டுமே மாற்றம் எதுவும் இல்லை என்றும் வேளாண் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

;