tamilnadu

img

நடப்பாண்டின் ஜிடிபி 4.9 சதவிகிதம் தான்... என்சிஏஇஆர் அமைப்பு கணிப்பு

புதுதில்லி:
2019-20 நிதியாண்டிற்கான இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி (ஜிடிபி), 4.9 சதவிகிதத்தைத் தாண்டாது என்று, பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சிக் கான தேசியக் கழகம் (NationalCouncil of Applidd Economic Research - NCAER) தெரிவித்துள்ளது. 

இந்தியப் பொருளாதாரம் கடந்த 2018 - 19 நிதியாண்டில் 6.1 சதவிகிதவளர்ச்சி கண்டிருந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் அது 4.9 சதவிகிதமாக இருக்கும்; குறிப்பாக மூன்றாவது காலாண்டில் 4.9 சதவிகிதம், நான்காவது காலாண்டில் 5.1 சதவிகிதம் என்ற அளவில் இருக்கும் என்றுகூறியுள்ளது.ஏற்கெனவே, நடப்பு 2019-20 நிதியாண்டின் முதல் இரண்டு காலாண்டுகளிலும் வளர்ச்சி விகிதம், 5 மற்றும்4.5 சதவிகிதம் என- கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜிடிபிவீழ்ச்சி கண்டுள்ளது. இந்நிலையில், தற்போது முழு நிதியாண்டிற் கான வளர்ச்சி விகிதமே 4.9 சதவிகிதம்தான் என்று என்.சி.ஏ.இ.ஆர்.மதிப்பிட்டுள்ளது. தேசிய புள்ளியியல் அலுவலகம் கூட (NationalStatistical Office -NSO) அண்மையில் 5 சதவிகித வளர்ச்சியைக் கணித்திருந்தது. என்.சி.ஏ.இ.ஆர். அமைப்பு அதிலும் 1 சதவிகிதத்தைக்குறைத்துள்ளது.இந்திய ரிசர்வ் வங்கி துவங்கிஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, ஆசியவளர்ச்சி வங்கி, ஐஎம்எப், உலகவங்கி வரை, அனைத்தும் இந்தியாவின் ஜிடிபி கணிப்பை வெகுவாக குறைத்து விட்டன. கிரிசில், பிட்ச்,மூடிஸ் என தரமதிப்பீட்டு நிறுவனங்களும் கணிப்பை தொடர்ந்து குறைத்து வருகின்றன. இந்தப் பின்னணியிலேயே என்.சி.ஏ.இ.ஆர். அமைப்பும் தனது கணிப்பை குறைத்துள்ளது.

;