tamilnadu

img

செய்வதறியாது திகைக்கும் 8 லட்சம் இந்தியர்கள்...

புதுதில்லி:
குவைத் அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்டத்தால், அந்நாட்டில் வசிக்கும் இந்தியர் களில் சுமார் 8 லட்சம் பேர், அங்கிருந்து வெளியேற வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பால், உலக நாடுகள் அனைத்துமே பொருளாதார ரீதியாக கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளன.குறிப்பாக, வேலை வாய்ப்புகள் குறைந்துள்ளதால், பெரும்பாலான நாடுகள் தங்கள் நாட்டுமக்களுக்கே வேலைகளில் முன்னுரிமை வழங்க முடிவெடுத்துள்ளன. 

அந்த வகையில், குவைத்நாடானது, வெளிநாட்டினர் எண்ணிக்கையைக் குறைக் கும் விதமாக, இடஒதுக்கீட்டு சட்டம் ஒன்றைக் கொண்டு வந்துள்ளது. அதாவது குவைத்திலுள்ள மொத்த மக்கள் தொகையில் வெளிநாட்டினர் எண்ணிக்கை 15 சதவிகிதத்திற்கு அதிகமாக இருக்கக் கூடாது. குவைத்தில் தற்போது 43 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் உள்ளனர். ஆனால், அவர்களில் சுமார் 30 லட்சம் பேர்வெளிநாட்டினர். இந்தியர்கள் மட்டுமே 14 லட்சத்து 50 ஆயிரம் பேர் உள்ளனர். அந்த வகையில், இந்தியர்களில் சரிபாதி பேர்- சுமார் 8 லட்சம் பேர் குவைத்தை விட்டு வெளியேற வேண்டிய நெருக்கடி ஏற்பட் டுள்ளது. இதேபோல ஏனையவெளிநாட்டினரும் குவைத்தைவிட்டு வெளியேற வேண்டும்.கொரோனாவுக்கு முன்பேஇந்தியாவில் வேலையின்மை ஒரு பெரும் பிரச்சனை. கொரோனா அதனை மேலும் அதிகமாக்கி விட்டது. இந்நிலையில், குவைத் வாழ் இந்தியர் களும் வேலையிழக்கும் பட்சத் தில், இந்தியாவின் நிலைமை மேலும் மோசமாகும் என்று கூறப்படுகிறது.

;