tamilnadu

img

வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்ட பரூக் அப்துல்லாவை விடுவிக்க உத்தரவு

காஷ்மீர்,மார்ச் 13- 6 மாதமாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த தேசிய மாநாட்டு கட்சித் தலைவரும் முன் னாள் முதலமைச்சருமான பரூக் அப்துல்லாவை விடுவிக்க ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச  நிர்வா கம் உத்தரவிட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய பாஜக அரசு ரத்து செய்து,அந்த மாநிலத்தை இரண்டாகப் பிரித்து சிதைத்தது. இணையதளங்களுக்கான இணைப்புகள் மற்றும் கைபேசி இணைப்புகளும் சில மாதங்கள் முடக்கி வைக்கப்பட்டன. முன் னாள் முதல்வர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் தடுப்புக் காவ லில் வீட்டுச்சிறையில் அடைக்கப் பட்டனர்.மோடி அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கையைக் கண் டித்து நாடு முழுவதும் போராட்டங் கள் நடைபெற்றன. இதில் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் காவலில் அடைக்கப்பட்டு, சுமார் 6 மாதங்கள் இருந்தார்.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச நிர்வாகம் வெள்ளி யன்று வெளியிட்டுள்ள அறிவிப் பில், ஜம்மு-காஷ்மீர் பொது பாது காப்புச் சட்டத்தின் 19ஆவது பிரிவு அளித்துள்ள அதிகாரங்களுக்கு உட்பட்டு, பரூக் அப்துல்லா மீதான தடுப்பு காவல் நடவடிக்கை திரும்ப பெறப்படுவதாக தெரிவிக்கப்பட் டுள்ளது.இதற்கான உத்தரவை ஜம்மு-காஷ்மீருக்கான உள்துறை செயலாளர் ஷலீன் கப்ரா பிறப்பித் துள்ளார்.

;