tamilnadu

img

கொரோனா வைரஸ் நோய்... இந்தியாவில் பலி 11 பாதிப்பு 562 பேராக அதிகரிப்பு

புதுதில்லி:
இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய்க்கு பலியானோர்  எண்ணிக்கை 11 பேராகவும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 562 பேராகவும் அதிகரித்துள்ளது.தில்லியில் ஏற்கனவே ஒருவர் கொரோனா தொற்றால் பலியானார்.  இரண்டாவதாக மற்றொருவரும் உயிரிழந்துள்ளதாக மத்தியசுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இதையடுத்து இந்தியாவில் கொரோனா பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 11 பேராக அதிகரித்துள்ளது.நாடு தழுவிய அளவில் அமல்படுத்தப் பட்டுள்ள ஊரடங்கை முழுமையாக பின்பற்றினால் 89 சதவீதம் அளவுக்கு பாதிப்புகள் குறைய வாய்ப்பிருப்பதாக இந்திய மருத்துவஆராய்ச்சி கவுன்சில் நம்பிக்கை தெரிவித் துள்ளது.

மருத்துவர்களுக்கு நெருக்கடி
இதனிடையே தில்லியில் மருத்துவர் கள், பாராமெடிக்கல் ஊழியர்கள் பெரும் பாலானோர், தாங்கள் குடியிருக்கும் வீடுகளை காலி செய்யுமாறு உரிமையாளர்கள் வற்புறுத்துவதாக புகார் அளித்துள்ளனர். கொரோனா அச்சுறுத்தலால் ஹைட்ராக்ஸிகுளோரோகுயீன் மருந்து ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

 562 பேருக்கு பாதிப்பு 
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 562 பேராகஅதிகரித்துள்ளது. உலகளவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 லட்சத்து21 ஆயிரத்து  413 பேராக அதிகரித்துள்ளது. இதில் 1 லட்சத்து 08 ஆயிரத்து 388 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.  இந்தியாவில் கொரோனாவைத் தடுக்கஅரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 562 பேராக அதிகரித்துள்ளது.

;