இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் ஈரானில் வசித்து வந்த இந்தியர் ஒருவரும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உலகம் முழுவதும் பலியானவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தை தாண்டி உள்ளது. 176 நாடுகளில் பரவியுள்ள இந்த வைரஸ் பாதிப்பால் இதுவரை 9,149 பேர் உயிரிழந்துள்ளனர். 176 நாடுகளுக்கு பரவிய நிலையில் கொரோனா பாதிப்பில் இருந்து 85,791 பேர் குணமடைந்துள்ளனர். சீனா - 3,245, இத்தாலி - 2,978, ஈரான் -1 284, ஸ்பெயின் - 640 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். இந்த தகவலை உலக சுகாதார அமைப்பு உறுதிப்படுத்தி உள்ளது.
இந்தநிலையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 173 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் இந்தியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் இதனை தெரிவித்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 72 வயது முதியவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளது உறுதியாகி உள்ளது. கர்நாடகா, டெல்லி, மராட்டியம் மாநிலங்களை தொடர்ந்து தற்போது பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் 72 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் ஈரானில் இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் தமிழகத்தில் இதுவரை 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.