ஜார்கண்ட் மாநிலத்தில் கொரோனா நோயாளி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி நகரில் மருத்துவ அறிவியல் மையம் செயல்பட்டு வருகிறது. அங்கு கொரோனாவா பாதிக்கப்பட்ட 32 வயது இளைஞர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் மருத்துவமனையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை ராஞ்சி காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.