tamilnadu

img

ஒரே நாளில் 37 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று... பிரேசிலை பின்னுக்குத்தள்ளிய இந்தியா... 

தில்லி 
ஆசியாவின் கொரோனா மையமாக உள்ள இந்தியாவில் கொரோனா பரவல் வேகம் ராக்கெட் வேகத்தில் உள்ளது. குறிப்பாக கடந்த 4 நாட்களாக தினசரி பாதிப்பு 30 ஆயிரத்துக்கு மேல் உள்ள நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் புதிய உச்சமாக 37,407 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் ஏற்படும் தினசரி கொரோனா பாதிப்பில் இதுதான் அதிகபட்சமாகும்.   

இதன்மூலம் மொத்த பாதிப்பு 10.77 லட்சமாக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று ஓர் நாளில் 543 பேர் பலியாகிய நிலையில், இதுவரை மொத்தமாக 26,868 பேர் பலியாகியுள்ளனர். ஒரே நாளில் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்த நிலையில், இதுவரை 6.77 லட்சம் பேர் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர்.  

உலகின் தினசரி கொரோனா பாதிப்பு என எடுத்துக்கொண்டால் அமெரிக்கா முதலிடத்திலும், பிரேசில் 2-வது இடத்திலும், இந்தியா 3-வது இடத்திலும் இருப்பது வழக்கமான விஷயம் தான். இது கடந்த 1 மாத காலமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் நேற்று (சனிக்கிழமை) எல்லாம் மாறி பிரேசில் 26,549 பாதிப்புடன் 3-வது இடத்துக்கு சென்றது. அமெரிக்காவில் 63 ஆயிரம் பாதிப்புடன் முதலிடத்தில் உள்ளது.

;