இந்தியாவில் கொரோனா பாதிப்பு 8 லட்சத்தை கடந்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 20 ஆயிரத்தை கடந்துள்ளது.
சீனாவின் உகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு இன்று உலகம் முழுவதும் பரவி உள்ளது. இந்தியாவில் தொடர்ந்து கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 27114 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 820916 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 519 பேர் பலியாகி உள்ளனர். இதனால் ஒட்டு மொத்த பலி எண்ணிக்கை 22,123 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கடந்த 24மணிநேரத்தில் 19873 பேர் குணமடைந்துள்ளனர். இதையடுத்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 515,386 ஆக உயர்ந்துள்ளது.