tamilnadu

img

கொரோனா மயமான மருத்துவமனைகள்.... நாட்டில் கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை மறுக்கப்படுகிறது....

புதுதில்லி:
நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சையில் மட்டுமே தீவிர கவனம் செலுத்திவருவதால், கர்ப்பிணிகளுக்கு தேவையான சிகிச்சைகள் மறுக்கப்படுவதாக, தேசிய பெண்கள் ஆணையம்புகார் தெரிவித்துள்ளது.இதன்காரணமாக பலஉயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் தேசிய பெண்கள் ஆணையத் தலைவர் ரேகா சர்மா, மத்திய சுகாதாரத் துஅமைச்சர் ஹர்ஷ் வர்தனுக்குகடிதம் எழுதியுள்ளார்.“பிரசவத்திற்காக, மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு ஆம்புலன்ஸ் சேவைகூட கிடைக்காத சூழல் தற்போது பல மாநிலங்களில் ஏற்பட்டுள்ளது. பலமருத்துவமனைகளில் பிரசவத்திற்கு அனுமதி மறுக்கின்றனர். இதனால், தாயும்சேயும் இறந்த சம்பவங்கள் கூட நடந்துள்ளன. இது மிகவும் கவலை அளிக்கிறது.
எனவே, பிரசவத்திற்கு தனி ஆம்புலன்ஸ் சேவைவழங்கவும், மருத்துவமனைகளில் படுக்கை வசதி ஏற்படுத்தித் தரவும், தனி அவசர உதவி எண்களை அறிவிக்கவும், அனைத்து மாநிலமற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கும், மத்திய அரசுஉத்தரவிட வேண்டும்” என்றுரேகா சர்மா அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

;