tamilnadu

img

பலவீனத்தை அம்பலப்படுத்தியது கொரோனா... நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் முகம்மது யூனுஸ் கருத்து

புதுதில்லி:
பொருளாதார நடவடிக்கைகளுக்காக, 2006-ஆம் ஆண்டு அமைதிக்கான ‘நோபல்’பரிசு பெற்றவர், வங்கதேச பேராசிரியர் முகம்மது யூனுஸ். இவருடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, வீடியோ கான்பரன்ஸ் மூலம் ‘இந்தியப் பொருளாதாரம்’ குறித்து உரையாடல் நடத்தினார். 

குறிப்பாக, கொரோனா நெருக்கடியை ஒட்டிய புலம்பெயர் தொழிலாளர்களின் நிலைகுறித்து ராகுல், அவரிடம் வினாக்களை எழுப்பியிருந்தார்.அவற்றுக்குப் பதிலளித்து, பேராசிரியர் முகம்மது யூனுஷ் கூறியிருப்பதாவது:

புலம்பெயர் தொழிலாளர்களை மேல்நிலை பொருளாதாரவாதிகள் அங்கீகரிப்பதில்லை. புலம்பெயர் தொழிலாளர்களின் தொழிலை ‘இன்பார்மல் செக்டார்’- அமைப்புசாரா துறை என்று அழைக்கின்றனர். எனவே,புலம்பெயர் தொழிலாளர்கள் பொருளாதாரத்தின் அங்கம் அல்ல! என்று வைத்திருக்கிறார்கள். பொருளாதாரம் அமைப்புசார்ந்த துறையின் மூலமே தொடங்குகிறது என்று கருதுகின்றனர். நாம் அமைப்புசார் அல்லது முறைசார்தொழில்களுடன் மும்முரமாக இருக்கிறோம்.மேற்கத்திய பாணியைக் கடைப்பிடிக்கிறோம். நிதித்துறை, பொருளாதாரம் என்று மேற்குலக நாடுகளை பின்பற்றுகிறோம். எனவேதான் இந்தியாவில் மிகப்பெரிய அளவில் இருக்கும் முறைசாரா தொழிலாளர்கள், கொரோனா ஊரடங்கையொட்டி கூட்டம் கூட்டமாக வெளியேறியபோது, அவர்களின் அதிர்வுத் திறனை நாம் மதிக்கவில்லை. அரசுகள் விலகி நின்றன. இது அமைப்புசாரா துறை, நாம் இதில் செய்ய ஒன்றுமில்லை என்ற சிந்தனையே இதற்கு காரணம்.ஆனால், சமூகத்தின் இந்த பலவீனங்களை கொரோனா வைரஸ் இன்றுஅம்பலப்படுத்தி இருக்கிறது. கொரோனாவைரஸ் பெருந்தொற்று நாம் நம் பொருளாதார மாதிரிகளை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்துகிறது. புவி வெப்பமடைதல் இல்லாத, செல்வம் ஓரிடத்தில் குவியாத, வேலையின்மை இல்லாத ஒரு உலகைக் கட்டமைக்க கொரோனா ஒரு நல்வாய்ப்பை வழங்கியுள்ளது.ஆனால், நாம் அதனைப் புறந்தள்ளிவிட்டு, மீண்டும் பழைய பயங்கர உலகிற்குள்ளேயே போவோமேயானால் மீண்டும்சிக்கல்தான். இவ்வாறு பேராசிரியர் முகம்மது யூனுஸ்கூறியுள்ளார்.

;