tamilnadu

img

கொரோனா பாதிப்பை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிப்பு பலியானோர் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் வழங்க உத்தரவு

புதுதில்லி:
இந்தியாவில் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இதனைத்தொடர்ந்து கொரோனா வைரஸ் பாதிப்பை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்துள்ளது.சீனாவின் உகான் நகரில் கொரோனா வைரஸ் நோயால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். இந்தவைரஸ் நோயை அமெரிக்காவின் ராணுவப் பிரதிநிதிகள்தான் சீனாவில் பரப்பினர் என்று அந்நாட்டின் வெளியுறவு அதிகாரி அதிர்ச்சிதகவலை தெரிவித்தார். பல்வேறு நாடுகளும் இந்நோயால் பாதிக்கப்பட்டன. தற்போது சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பைகட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

87 பேராக அதிகரிப்பு
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 87 பேராக  அதிகரித்துள்ளது.  67 இந்தியர்கள், 16 இத்தாலியர்கள், கனடாவை சேர்ந்த ஒருவர்உள்பட 87 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இந்த 87 பேருடனும் தொடர்புடைய 4 ஆயிரம் பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.கொரோனா வைரசை பெரும் தொற்று நோய் என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.  நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்புஅதிகரித்து வரும் நிலையில் இதனை தேசிய பேரிடராக மத்திய உள்துறை அமைச்சம் அறிவித்துள்ளது.பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை தேசிய மருத்துவ அமைப்பு வழங்கும் . கொரோனாவை பேரிடராக கவனத்தில் கொண்டு மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  வைரஸ் நோய்க்கு  பலியானோர் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.


 

;