tamilnadu

img

கடலில் மாயமான மீனவர் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம்  வழங்கிடக் கோரிக்கை

நாகர்கோவில்:
தேங்காய்ப்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்தில் அலையில் சிக்கி மாயமான மீனவர்களுக்கு நீதியும் நிவாரணமும் வழங்க வலியுறுத்தி பாதிக்கப்பட்ட மீனவர்கள் குடும்பத்தினர் மற்றும் மீனவ அமைப்பினர் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வழியாக தமிழக முதல்வருக்கு அளித்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: கன்னியாகுமரி மாவட்டம் முள்ளூர் துறையை சார்ந்த சபரியார்பிச்சை மகன் அந்தோணி (68) என்ற மீனவர் ஜூலை 23 ஆம் தேதியன்று அதிகாலை 5 மணி அளவில்அவரது மகனோடு பைபர் மரத்தில் மீன் பிடிப்பதற்காக தேங்காய்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கிளம்பிய போது மீன்பிடித் துறைமுகம் முகத்துவாரத்தில் ஏற்பட்ட அலையில் சிக்கி மரம் கவிழ்ந்ததில் மீனவர் அந்தோணி கடலுக்குள் மூழ்கி மாயமானார். அவரது மகன்நீந்தி கரை சேர்ந்தார்.

மாயமான அந்தோணியை மீனவர்கள் மூன்று நாட்களாக தேடியும் அவரது உடல் இன்று வரை மீட்கப்படவில்லை. தனது முதிர்ந்த வயதிலும்தனது குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்காக கடலுக்கு சென்ற மீனவரின்இறப்பு அவரது குடும்பத்தாரை சோகத்திலும் வறுமையிலும் மூழ்கடித்துள்ளது.அது போன்று கடந்த 24 ஆம் தேதியன்று அதிகாலை ரெக்ட்ஸ்டன்என்ற நாட்டுப் படகில் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் துறையைசார்ந்த வர்கீஸ் மகன் சிபு, பெல்கிஸ் மகன் அவுசெப்தாசன் (40), பெள்கிஸ்மகன் ஜான்பால் (42), செல்வேந்திரன் மகன் ஜார்ஜ் (40), புஷ்பணாயகம் மகன் ஜஸ்டின்(25), ஆகியோர் ஆழ்கடலில் பாதுகாப்பாக மீன்பிடித்துவிட்டு அன்று மாலை 5 மணி அளவில் தேங்காய்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்தில் முகத்துவாரத்தில் நுழைந்த போது அங்கு ஏற்பட்ட தொடர் அலையில் மீனவர்களது நாட்டுப்படகு சிக்கி கவிழ்ந்தது. இதில் ஐந்து மீனவர்களும் தூக்கி வீசப்பட்டார்கள். சிபு (25) என்ற மீனவர் படுகாயங்களுடன் கடலுக்குள் மூழ்கினார். மற்ற நான்கு மீனவர்களும்படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் அவ்வழியாக வந்த சகமீனவர்கள் தங்களது நாட்டுப் படகுகளில் 4 மீனவர்களை மீட்டு பாதுகாப்பாக கரை சேர்த்தார்கள். \

கடலில் மூழ்கி மாயமான சிபு மீனவரை சகமீனவர்கள் தேடியும் அவரது உடல் இதுவரை மீட்கப்படவில்லை. சிபு மீனவரின் இறப்பால் அவரது வயதான பெற்றோர்களும் இரண்டு சகோதரர்களும் சோகத்திலும் வறுமையிலும் மூழ்கியுள்ளனர்.இரண்டு மீனவர்களின் இறப்பிற்கு காரணம் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் முகத்துவாரத்தில் தேங்கி உள்ள மணல் மேடுகளை அகற்றுவதற்கு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளாத தேங்காப்பட்டணம் மீன்பிடித் துறைமுக நிர்வாகம், கன்னியாகுமரி மாவட்டமீன்வளத்துறை நிர்வாகமும், கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகமும் பொறுப்பேற்க வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இரண்டு மீனவர்களின் இறப்பினால் குடும்பங்களுக்கு நிரந்தர வருவாய் இழப்பை ஏற்படுத்தி உள்ளது. 

எனவே அரசு அதிகாரிகளின் பொறுப்பற்ற செயலால் 2 மீனவர்கள்இறந்து உள்ளதால் அவர்களது குடும்பத்தாருக்கு நிரந்தர வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆகவே இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 20 லட்ச ரூபாய் வருவாய் இழப்பீடாகவும், குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலையும் வழங்க வேண்டும் என அதில்
கூறப்பட்டுள்ளது.