tamilnadu

img

கொரோனா தடுப்பு நடவடிக்கை

மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை

புதுதில்லி,ஏப்.2- கொரோனா பாதிப்புகள் தொடர் பாக அனைத்து மாநில முதல்வர்களு டன் பிரதமர் மோடி வியாழனன்று ஆலோசனை நடத்தினார். இந்தியாவில் கொரோனா வைரஸ் நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இத னைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை களை மேற்கொண்டு வருகின்றன. நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப் பிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், கொரோனா பாதிப்புகள் தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி வியாழனன்று காலை 11 மணியள வில் ஆலோசனை நடத்தினார். காணொ லிக் காட்சி வாயிலாக நடைபெற்ற இந்த ஆலோசனைக்கூட்டத்தில் சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்தபடி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். மகாராஷ் டிரா, கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, ராஜஸ்தான், பீகார், மத்தியப் பிர தேசம், குஜராத், ஹரியானா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களின் முதல மைச்சர்களும் கலந்துகொண்டனர். 

கொரோனாவால் பாதிக்கப்பட் டுள்ளோரின் எண்ணிக்கை, வைரஸ் பரவுவதை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், ஊரடங்கு, புதிதாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை கள், மருத்துவ வசதிகள், மாநில அர சுக்கு தேவையான உதவிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியிடம் எடுத்துரைத்த தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.