tamilnadu

img

தில்லி வன்முறையில் சிசிடிவி கேமிராக்களை உடைத்த போலீசார்

புதுதில்லி:
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு(சிஏஏ) எதிராக தில்லியில் போராடியவர்கள் மீது, அச்சட்டத்தை ஆதரிக்கும் ஆர்எஸ்எஸ்-பாஜக மதவெறிக்கும்பல் தாக்குதல் நடத்தினர். இந்த வன்முறையில்  காவல்துறை யினரே சிசிடிவி கேமராக்களை உடைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

தில்லி வன்முறை தொடர்பான வழக்குபிப்ரவரி 26 அன்று தில்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதி முரளிதர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறையினரிடம் அடுக்கடுக் கான கேள்விகளை எழுப்பியிருந்தார். வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசியவர்கள் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யாததற்கு கடும் கண்டனத்தைப் பதிவு செய்திருந்தார். தில்லி வன்முறைக்கு, காவல்துறையின் மெத்தனப் போக்கே காரணம் என்று உச்ச நீதிமன்றமும் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் காவல்துறையினரே சிசிடிவி கேமிராக்களை உடைக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் இந்த காட்சிகள் பகிரப்பட்டுவருகிறது. குரேஜிகாஸ் போராட்டக் களத்திலிருந்த சிசிடிவிகளை போலீசார் உடைத்ததாக இந்த வீடியோ பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

;