மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பதில் குழப்பம்
மும்பை, அக். 28- மகாராஷ்டிராவில் பாஜக, சிவசேனா கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில் மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆளுநரை திங்களன்று சந்தித்தார். 288 உறுப்பினர்களை கொண்ட மகாரா ஷ்டிரா சட்டசபைக்கு கடந்த 21 அன்று நடைபெற்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்த மாநிலத்தில் ஆட்சி அமைக்க குறைந்த பட்சம் 145 இடங்களில் வெற்றி பெற்றாக வேண்டும். ஆளும் பாரதிய ஜனதா-சிவசேனா கூட்டணி 161 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைப்பதற்கான தகுதியை பெற்றது. இந்த கூட்டணியில் 164 இடங்களில் போட்டி யிட்ட பாரதிய ஜனதா 105 இடங்களில் வெற்றி பெற்றது. 124 தொகுதிகளில் போட்டியிட்ட சிவசேனாவுக்கு 56 இடங்கள் கிடைத்தன.
காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி 98 இடங்களை கைப்பற்றியது. இந்த அணியில் 147 தொகுதிகளில் போட்டி யிட்ட காங்கிரசுக்கு 44 இடங்களும், 121 தொகுதிகளில் போட்டியிட்ட சரத்பவாரின் தேசியவாத காங்கிரசுக்கு 54 இடங்களும் கிடைத்தன. பிற கட்சிகளுக்கு 16 இடங்கள் கிடைத் தன. 13 தொகுதிகளில் சுயேச்சைகள் வெற்றி பெற்று இருக்கிறார்கள். புதிய அரசை அமைப்பதற்கான பெரும்பான்மை பலம் பாரதிய ஜனதா-சிவசேனா கூட்டணிக்கு இருந்தபோதிலும், ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. முதல்-மந்திரி பதவியை யார் வகிப்பது, ஒவ்வொரு கட்சிக்கும் எத்தனை மந்திரி பதவிகள் என்று முடிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. இதற்கிடையில், மகாராஷ்டிர பாஜக தலைவரும் தற்போதைய முதல்வருமான தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் சிவ சேனா கட்சி திவாகர் மாநில ஆளுநரை தனித்தனியே சந்திக்கத் திட்டமிட்டனர். இந்நிலையில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்தார். பின்னர் திவாகரும் சந்தித்தார்.
104 இடங்களுடன் பாஜக தனிப்பெரும் கட்சியாக இருந்த போதும் கூட்டணிக் கட்சி யான சிவசேனையின் 56 எம்.எல்.ஏக்கள் ஆத ரவுடன் தான் ஆட்சியை அமைக்க முடியும் என்ற நிலையில், சிவசேனைத் தலைவர் உத்தாவ் தாக்கரேயின் மகனான ஆதித்யா வை 50-50 பங்கீடு என்ற உடன்படிக்கை யின்படி இரண்டரை ஆண்டுகள் முதல மைச்சராக்க பாஜகவிடம் வலியுறுத்தி யதைத் தொடர்ந்து, கூட்டணியில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தேவேந்திர பட்னாவிஸ்தான் மீண்டும் முதலமைச்சர் என பிரதமர் மோடி அறி வித்துள்ளதால் ஆதித்யாவை 5 ஆண்டு களுக்கும் துணை முதலமைச்சராக்க தயார் என பாஜக தெரிவித்துள்ளது. இதை ஏற்க சிவசேனை மறுத்து விட்டது. பாஜகவின் ரிமோட் கண்ட்ரோல் சிவசேனாவிடம் இருப்பதாக சிவசேனா வின் அதிகாரப்பூர்வமான நாளேடான சாம்னாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் பாஜக தலைவர் அமித் ஷா சிவசேனை தலைவர்களுடன் அக்டோபர் 30 அன்று பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றும் கூறப்படுகிறது.