பீகாரில் லோக் ஜனசக்தி கட்சியை (எல்ஜேபி) தனித்துப்போட்டியிட வைத்து, பாஜக-தான்,நிதிஷ் கட்சிக்கு மறைமுக நெருக்கடியை அளித்து வருவதாக கூறப்படும் நிலையில், ‘‘எல்ஜேபி தலைவர் சிராக் பஸ்வான் மற்றவர்களின் தாளத்திற்கு ஏற்ப நடனமாடுகிறார்’’ என்று ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ஜா குற்றம் சாட்டியுள்ளார்.