tamilnadu

img

மத்திய அரசுத்துறை செயலாளர்களில் உயர்சாதியினர் ஆதிக்கம்!

புதுதில்லி:
மத்திய அரசின் செய லாளர் பதவிகளைப் பொறுத்தவரை, பட்டியல் - பழங்குடி வகுப்பினரும், இதரபிற்படுத்தப்பட்டோரும் ஆரம்பம் முதலே புறக்கணி க்கப்பட்டு வருகின்றனர். உயர்சாதியினரே இப்பதவி களில் நியமிக்கப்படுவது தொடர்ந்து வருகிறது.
அந்த வகையில், மத்தியப் பணி யாளர், குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத் துறை அமைச்சகம் அண்மையில் வெளியிட்ட தரவுகளிலும், முந்தைய நிலையே தொடர்வதும், பட்டியல் - பழங்குடி வகுப்பினர் மற்றும் இதரபிற்படுத்தப்பட்டவர்கள் எப்போதும்போல புறக்கணிக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்துள்ளது.மத்திய அரசுத்துறைச் செய லாளர்களாக 89 பேர் இருக்கின்றனர். இவர்களில் பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர் ஒரே ஒருவர்தான். பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர்கள் 3 பேர்உள்ளனர். இதர பிற்படுத்தப்பட்ட ர்கள் என்று பார்த்தால் ஒருவர் கூட இல்லை. செயலாளர் தகுதி நிலையில் இது என்றால், கூடுதல் செயலாளர், இணைச் செயலாளர் பதவி களிலும் இதேநிலைதான். மொத்தமுள்ள 93 கூடுதல் செயலாளர்களில் 6 பேர் மட்டுமே பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர்கள். பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர்கள் 5 பேர். இதிலும் ஒருவர் கூட இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள் கிடையாது.மத்திய அரசின் இணைச் செயலாளர்களாக 275 பேர் இருக்கின்றனர். தகுதி நிலையில், இது மூன்றாவதாக வருகிறது. என்றாலும் இதுவும் உயர்சாதி அதிகாரிகளின் ஆதிக்கத்திற்கே விடப்பட்டுள்ளது. இணைச் செயலாளர் பதவிகளில், பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர்கள் 13 பேர்தான் இருக்கின்றனர். பழங்குடி வகுப்பினரை எடுத்துக் கொண்டால், 9 பேரும், இதர பிற்படுத்தப்பட்டவர்கள் 19 பேரும் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.

;