அமராவதி, அக். 2 - அதிகாரத்தைப் பயன் படுத்தி, தனது நிறுவனங்க ளுக்கு முதலீடுகளை பெற்றது தொடர்பாக, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மீது 2012-ஆம் சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த வழக் கில், வாரம் ஒரு முறை நேரில் ஆஜராக வேண் டும் என்ற உத்தரவிலி ருந்து தனக்கு விலக்கு அளிக்கவேண்டும் என நீதி மன்றத்தில் ஜெகன் மனுத் தாக்கல் செய்திருந்தார். ஆனால், ஜெகன் மோகன் ரெட்டிக்கு நேரில் ஆஜ ராவதிலிருந்து விலக்கு அளிக்கப்படக்கூடாது என சிபிஐ கெடுபிடி காட்டி யுள்ளது.