tamilnadu

img

சாதி மறுப்புத் திருமண தம்பதி கல்லால் அடித்துக் கொலை!

4 ஆண்டுகள் ஆகியும் தணியாத சாதி ஆணவம்

பெங்களூரு, நவ. 8 - கர்நாடகா மாநிலத்தின் கடக் மாவட்டத்தில் லக்காலா கட்டி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் மாதர், கங்கம்மா என்ற இருவரும் காதலித்துவந்தனர்.  இருவரும் வெவ்வேறு சாதிப்பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் காத லுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. ஆனால், ரமேஷ் மாதர் - கங்கம்மா இணை யானது, கடந்த 2015-ஆம் ஆண்டு பெற்றோர் எதிர்ப்பையும் மீறி காதல் திருமணம் செய்து கொண்டதுடன், ஊரைவிட்டும் வெளியேறி யுள்ளனர். கர்நாடகா மாநிலத்திற்கு உள்ளேயே, பல்வேறு ஊர்களில் கூலி வேலை செய்து பிழைத்து வந்துள்ளனர். இந்நிலையில், இந்த தம்பதி 4 ஆண்டுகள் கழித்து,  கடந்த நவம்பர் 6-ஆம் தேதி தங்க ளின் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர்.  ஆனால், இவர்கள் ஊருக்குள் நுழையும் போதே அவர்களை அடையாளம் கண்டுகொண்ட அப்பகுதி மக்கள் கற்களால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் ரமேஷ் மாதர் - கங்கம்மா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயரிழந்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

;