tamilnadu

img

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்துசெய்யக் கோரும் வழக்குகள்... அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்

புதுதில்லி:
குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக்கோரி  உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஏராளமான வழக்குகள் மீதான விசாரணையை  5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த இடைக்காலத் தடை விதிக்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் மக்களை பிளவுபடுத்தும் வகையில் உள்ளதாக குற்றம்சாட்டியும் அதனை திரும்பப்பெறக்கோரியும் நாடு முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் மற்றும்  அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங் களை நடத்தி வருகின்றனர்.  இந்நிலையில் குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராகவும் அதனை ரத்து செய்யக்கோரியும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஜெய்ராம் ரமேஷ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,எஸ்எப்ஐ, திமுக, மக்கள் நீதி மய்யம், இந்திய யூனியன் முஸ்லிம்லீக், திரிணாமுல் காங்கிரஸ்,ஓவைஸி உட்பட உச்சநீதிமன்றத்தில் 140-க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அதில் பெரும்பாலான மனுக்களில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தன.இந்த மனுக்கள் மீதான விசா ரணை கடந்த மாதம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே தலை மையிலான அமர்வு முன்பு நடை பெற்றது. அப்போது,  மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசா ரணை ஒத்திவைக்கப்பட்டது. 

இந்நிலையில் மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான அமர்வு முன்பு ஜனவரி 22 புதனன்று மீண்டும் நடைபெற்றது.  அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான அட்ட ர்னி ஜெனரல் வேணுகோபால், 140 மனுக்கள் வரை உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டி ருப்பதாகவும், அதில் 60 மனுக்கள் மட்டுமே அரசிடம் அளிக்கப் பட்டிருப்பதால், பதில் மனு தாக்கல் செய்ய அரசுக்கு அவகாசம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
மனுதாரர்கள் சார்பில் ஆஜ ரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கூறுகையில், இந்த விவ
காரம் குறித்து அரசியல் சாசனஅமர்வு விசாரிக்க வேண்டும் என்றும்  வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெறுவதை கருத்தில் கொண்டு, 2 முதல் 3 மாதங்கள் வரை குடியுரிமை வழங்கும் நடவடிக்கையை நிறுத்திவைக்க மத்திய அரசுக்கு உத்தர விட வேண்டும். தேசிய குடிமக்கள் பதிவேடு நடவடிக்கை ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளதாகவும் அதை ஒத்திவைக்கும்படி இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மற்றொரு மூத்த வழக்கறி ஞர் அபிஷேக் மனு சிங்வி வாதிடுகையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த இடைக் கால தடை விதிக்க வேண்டும் என்றார்.மத்திய அரசின் வாதத்தை கேட்காமல் இடைக்கால தடை விதிக்கக் கூடாது என்று அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் கூறி னார். அவரின் வாதத்தை ஏற்றுக் கொள்வதாக கூறிய தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே, மத்திய அரசின்வாதத்தை கேட்காமல், இடைக் காலத் தடை விதிக்கப்படமாட்டாது என்றார்.

இதன்பின்னர் மனுக்கள் மீது பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு 4 வாரம் அவகாசம் அளி த்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இவ்வளவு மனுக்கள் ஏன் தாக்கல் செய்யப்பட்டது என்ற காரணத்தை அறிய முடியவில்லை. மனுக்கள் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்தப்படும். அனைத்து மனுக்களையும் விசாரிக்காமல் ஒருதலைபட்சமான உத்தரவு பிறப்பிக்கப்போவதில்லை.  குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான உத்தரவு பிறப்பிக்க உயர்நீதிமன்றங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. மனுக்கள் மீதான விசாரணையை 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவதாகவும் சட்டத்தின் மீது இடைக்காலத் தடை விதிக்க வேண்டுமா என்பது குறித்து அரசியல் சாசன அமர்வு முடிவு செய்யும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவில் தெரி வித்துள்ளனர்.

;