காந்திநகர்:
குழந்தைகளுக்கு ஆபாச வீடியோ காட்டியதாக போலிச்சாமியார் நித்தியானந்தா மீது குஜராத்காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.இது தொடர்பாக நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் இருந்த துர்லாபதி என்பவர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், நித்தியானந்தா ஆசிரமத்தில் உள்ளகுழந்தைகளுக்கு ஆபாச வீடியோக்களை காட்டிய தாகவும், அது தொடர்பாக காவல்நிலையம் மற்றும் குழந்தைகள் நல அமைப்பினரிடம் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஆசிரமத்துக்குவந்த அவர்கள், குழந்தை களிடம் அதே வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை காட்டி அத்துமீறிய மற்றும்ஆட்சேபகரமான கேள்வி களை எழுப்பியதாகவும் தெரிவித்திருந்தார்.