tamilnadu

img

இந்தியாவுக்கு ‘பாரத்’ என்று பெயர் சூட்டக்கோரிய வழக்கு தள்ளுபடி

புதுதில்லி:
தில்லியைச் சேர்ந்த வர்த்தகர் நமஹா. இவர், இந்தியா என்ற பெயரை‘பாரத்’ என்று மாற்றக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். 

“நாட்டின் பெயர்கள், ஆதார் அட்டையில் ‘பாரத் சர்க்கார்’ எனவும், ஓட்டுநர் உரிமத்தில் ‘யூனியன் ஆப் இந் தியா’ என்றும், பாஸ்போர்ட்டுகளில் ‘இந்திய குடியரசு’ என்று பல்வேறு பெயர் களில் குறிப்பிடப்பட்டு இருப்பது, குழப்பத்தை உருவாக்குகிறது. எனவே, தேசத்தின் பெயர் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்” என்று தனது மனுவில் கூறியிருந்தார்“இந்தியா” என்ற பெயர் இந்தியநாட்டிற்குள் இருந்து பெறப்படவில்லை; இது “இண்டிகா” என்ற வார்த்தையிலிருந்து பிறந்த கிரேக்க வம்சாவளியின் பெயர். அது அடிமை மனநிலையைக் குறிப்பதாக உள்ளது. எனவே, இந்தியா என்ற பெயரை ‘பாரத்’அல்லது ‘ஹிந்துஸ்தான்’ என மாற்றவேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். 

இதற்காக, இந்திய அரசியலமைப் புச் சட்டத்தின் பிரிவு 1 திருத்தப்பட வேண்டும்; அவ்வாறு திருத்துவது இந்திய அரசியலமைப்பு ஷரத்து 12-இன் கீழ் வரையறுக்கப்பட்ட ‘நாடு’ என்ற அரசாங்கத்தின் கடமை; மேலும் சரத்து 21-இன் கீழ், பாரத் என்று பெயர்சொல்லி அழைப்பது, இந்த நாட்டுக் குடிமகனின் அடிப்படை உரிமை என் றும் வாதங்களை வைத்திருந்தார்.இந்நிலையில், மனுவை விசாரித்த,தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு, இந்தியாவை ‘பாரத்’ என பெயர் மாற்றக்கோரும் வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.“இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் பாரத் என்று ஏற்கனவே இந்தியாவுக்கு பெயர் இருக்கிறது. எனவே இந்தவிஷயத்தில் எங்களால் உத்தரவு ஏதும்பிறப்பிக்க முடியாது. இதுதொடர் பான முடிவை மத்திய அரசுதான் எடுக்கவேண்டும்” என்றும் தீர்ப்பளித்துள்ளது.அரசியலமைப்புச் சட்டம் தொடர்பான விவாதத்தின் போது, பல்வேறு காரணங்களுக்காக டாக்டர் அம்பேத் கர்தான், இந்தியா என்ற பெயரையே தொடரலாம் என்று கூறி, அதனை உறுதிப்படுத்தியவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

;