tamilnadu

img

சீன மூலப் பொருட்களை தடுப்பதால் தொழில்கள் பாதிப்பு...

புதுதில்லி:
சீனாவிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்ட சரக்குகள், கடந்த சில வாரங்களாக, துறைமுகங்களிலேயே நிறுத்தப்பட்டு இருக்கின் றன.இதனால் தங்களின் தொழில் மிகவும் பாதிக்கப்படுவதாக இந்திய ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் குழுவினர், மத்திய நிதியமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர்.

“சென்னை, தூத்துக்குடி, பெங்களூரு, கொல்கத்தா, மும்பை, தில்லி ஆகிய இடங்களில் இருக்கும் துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களில் வந்திறங்கிய அனைத்து பொருட்களையும் 100 சதவிகிதம் சோதித்த பிறகேஅனுப்புவோம் என சுங்கத் துறையினர்தெரிவிப்பதால் சரக்குகளை பெறுவதில் மிகுதியான தாமதம் ஏற்படுகிறது.குறிப்பாக, சீனா, தைவான், ஹாங் காங்நாடுகளில் இருந்து வரும் சரக்குகளைஅனுமதிப்பதில் சுங்கத் துறையினர் தாமதம் ஏற்படுத்துகின்றனர். இதனால் ஆடை உற்பத்திக்கு, ஏற்றுமதிக்கு தேவையான சரக்குகளை பெறுவதில் நீண்ட தாமதம் ஏற்படுகிறது” என்று அந்த கடிதங்களில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல, துறைமுகங்கள், விமான நிலையங்களில் தேங்கியிருக்கும் சரக்குகளை தங்களுக்கு உடனடியாக அனுப்புமாறு தகவல் தொழில்நுட்ப உற்பத்தியாளர்கள் சங்கம், இந்திய செல்லுலார் மற்றும் மின்னணுபொருட்கள் சங்கம் உள்ளிட்ட தொழில்துறையினரும் அரசிடம் வலியுறுத்தியுள்ளனர்.

;