tamilnadu

img

பட்ஜெட் கூட்டத்தொடர் : இன்று 2-வது அமர்வு துவக்கம்

புதுதில்லி,மார்ச் 1- நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு மார்ச் 2 துவங்கி ஏப்ரல் 3 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 2020-21ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதியன்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு கடந்த 11 ஆம் தேதியுடன் நிறைவுற்றது. இந்த  கூட்டத்தொடரில் 45 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும் வாடகைத்தாய் மற்றும் வரி பங்கீடு தொடர்பான சட்ட மசோதாவை நிறைவேற்றவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தொடரில் தில்லியில் நடந்த வன்முறை மற்றும் பொருளாதார மந்த நிலை ஆகியவை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.