புதுதில்லி:
மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தொழில் முனைவோர் சிறப்பை அடிப்படையாகக் கொண்டது. மத்திய அரசுவெளியிட்டுள்ள இந்த தரவரிசைப் பட்டியலில் கேரளாவும் கர்நாடகாவும் முதலிடத்தில் உள்ளன. தொடக்க நிலை நிறுவனங்களின் அதிக வளர்ச்சி விகிதங்களைக் கொண்ட மாநிலங்களாக உத்தரபிரதேசம், தமிழ்நாடு, சிக்கிம், நாகாலாந்து, மிசோரம், மத்தியப் பிரதேசம், அசாம் மாநிலங்கள் உள்ளன.
30 வகையான குறியீடுகளை அடிப்படையாக கொண்டு இந்த தேர்வு நடைபெறுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கல்வி கற்றோர் எண்ணிக்கையில் முதலிடம் பிடித்தது. அதில் இந்தியசராசரியான 76.38 சதவிகிதத்தைவிட 20 சதவிகிதம் கேரளம் முன்னிலை (96.2) பெற்றது. இந்நிலையில் தற்போது புதிய தொழில்முனைவோர்களை உருவாக்குவதிலும் கேரளம் முதலிடம் பிடித்துள்ளது.