tamilnadu

img

விஜய் மல்லையாவிடமிருந்து பறிமுதல் செய்த சொத்துகளை வங்கிகள் பயன்படுத்தலாம் -நீதிமன்றம்

பொருளாதாரக் குற்றவாளி விஜய் மல்லையாவிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளை வங்கிகள் பயன்படுத்த நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. 
9000 கோடி வங்கிக்கடனை திரும்ப செலுத்த தவறிய விஜய் மல்லையா கடந்த மார்ச் 2016 இல் நாட்டை விட்டு வெளியேறினார். இதையடுத்து அவர்  இங்கிலாந்தில் வசித்து வருகிறார். பணமோசடி தடுப்புச்சட்டத்திற்கான சிறப்பு நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜனவரி 5 ஆம் தேதி மல்லையாவை தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக அறிவித்தது.இதைத்தொடர்ந்து சொத்துகள் பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டது. 
இந்நிலையில் கடன் வழங்கியவர்கள் மல்லையாவின் சொத்துகளை கலைத்து 2013ஆம் ஆண்டிலிருந்து ரூ .6,203.35 கோடிக்கான 11.5 சதவீத வட்டி செலுத்தப்பட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர்.
கடந்த ஆண்டு பிப்ரவரியில், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தலைமையிலான வங்கிகளின் கூட்டமைப்பு ஒன்றினால் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளை கலைப்பதில் எந்த ஆட்சேபணையும் இல்லை என்று சிறப்பு பணமோசடி தடுப்புச்சட்டத்திற்கான சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கூறியது. 
இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது மும்பை நீதிமன்றம் விஜய் மல்லையாவின் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை வங்கிகள் பயன்படுத்தலாம் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட தரப்பினர் இந்த உத்தரவின்மீது வரும் ஜனவரி 18க்குள் மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம் எனவும் நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. 
 

;