tamilnadu

img

ஆலைமூடல் நாட்களை அதிகரித்த அசோக் லேலண்ட் நிறுவனம்!

புதுதில்லி:
வாகன விற்பனை வீழ்ச்சி தொடர்வதன் காரணமாக அசோக் லேலண்ட் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு மேலும் 5 நாட் களை வேலையில்லா நாட்களாக அறிவித்துள்ளது.அசோக் லேலண்ட் நிறுவனம் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் அமைந்துள்ளதனது வாகன உற்பத்தித் தொழிற்சாலைகளில் செப்டம்பர் மாதத்தில் எத்தனை நாட் கள் உற்பத்தி நிறுத்தப்படுகிறது என்பது குறித்த அறிவிப்பினை இம்மாதத்தின் முதல்வாரத்தில் வெளியிட்டுள்ளது.இதன்படி, எண்ணூரில் உள்ள அசோக் லேலண்ட் தொழிற்சாலையில் செப்டம்பர் மாதம் 16 நாட்கள், ஒசூர் ஆலையின் 1, 2 பிரிவுகளில் 5 நாட்கள், ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார், மகாராஷ்டிர மாநிலம் பாந்த்ராஆலைகளில் 10 நாட்கள், உத்தரகண்ட் மாநிலம் பாண்ட்நகர் ஆலையில் 18 நாட்கள் எனஉற்பத்தி நிறுத்தப்படுகிறது.ஹிந்துஜா குழுமத்தைச் சேர்ந்த அசோக்லேலண்ட் நிறுவனத்தின் வர்த்தக வாகனங்கள் விற்பனை ஆகஸ்ட் மாதத்தில் 47 சதவிகிதம் அளவிற்கு வீழ்ச்சியை சந்தித்தது. இந்நிலையில் தொடரும் வாகனவிற்பனை வீழ்ச்சியின் காரணமாகவே அசோக் லேலண்ட் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு மேலும் 5 நாட்களை வேலையில்லா நாட்களாக அறிவித்துள்ளது. செப்டம்பர் 28, 30, அக்டோபர் 1, 8 மற்றும் 9 ஆகிய ஐந்து நாட்கள் வேலையில்லா நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தவேலையில்லா நாட்களுக்கான தொழிலாளர் ஊதியம் குறித்து தொழிற்சங்கங்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;