tamilnadu

img

தங்கக் கடத்தல் வழக்கில் மேலும் ஒருவர் கைது....

கொச்சி:
தங்கக் கடத்தல் வழக்கில் ஐக்கிய அரபு அமீரகத்தில் முவாற்றுப்புழா பெருமத்தம் கரிகானகுடி ரபின்ஸ் ஹமீத் கைது செய்யப்பட்டார். வெளிநாடு செல்வதற்கு முன்பு நாட்டில் தீவிர முஸ்லீம் லீக் ஊழியராக செயல்பட்டு  வந்தார்.இவர் பெருமத்தம்  கரிகானகுடியில் உள்ள ஒரு முக்கிய முஸ்லீம் லீக் குடும்பத்தைச் சேர்ந்தவராவார். 15 ஆண்டுகளாக இவர் வளைகுடா வில் இருந்தார்.ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த ரபின்ஸ்சொந்த ஊரில் ஒரு சிறு வணிகத்தை நடத்தி வந்தார். அப்பா கக்கடசேரியில் ஒரு தேநீர் கடை வைத்திருந்தார். ரபின்ஸும் அவரது சகோதரரும் வெளிநாடு சென்றதைத் தொடர்ந்து வேகமான பொருளாதார வளர்ச்சி அடைந்தனர். சமீப காலத்தில், பல்வேறு இடங்களில் அதிக அளவு நிலம் வாங்கி குவித்துள்ளனர். தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து புலனாய்வு அமைப்புகள் ரபின்ஸின் வீட்டில் சோதனை நடத்தின.

ஐக்கிய அரபு அமீரக தூதரகத்திற்கான பார்சல்களில் தங்கம் கடத்திய வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவர் ரபின்ஸ்ஹமீத். ஐக்கிய அரபு அமீரக அரசாங்கத் தால் நாடுகடத்தப்பட்ட பின்னர் அவர் திங்களன்று நெடும்பாசேரிக்கு அழைத்து வந்துகைது செய்யப்பட்டார். இந்த கடத்தலை ரபின்ஸ் மற்றும் முக்கிய குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான பைசல் பரீத் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். தாவூத் இப்ராஹிமின் டி நிறுவனத்துடன் இவருக்கு தொடர்பு இருப்பதாக என்ஐஏ நீதிமன்றத்தில் தெரிவித் திருந்தது.