tamilnadu

img

இந்தியாவில் மேலும் 3,390 பேருக்கு கொரோனா.... மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் 

தில்லி 
நாட்டில் மூன்றாம் கட்ட ஊரடங்கு விதிக்கப்பட்ட பொழுதிலும் கொரோனா பரவல் வேகம் இன்னும் கட்டுக்குள் வரவில்லை. தற்போது இந்தியா கொரோனா பரவலில் மூன்றாம் நிலையில் உள்ளதா இல்லை, நான்காம் நிலையில் உள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், மத்திய அரசு இதைப்பற்றி கண்டுகொள்ளாமல் ஊரடங்கு எவ்வாறு தளர்த்துவது என்பது பற்றிய சிந்திப்பில் தான் உள்ளது. 

குறிப்பாக மூன்றாம் கட்ட ஊரடங்கு வரும் 17-ஆம் தேதி நிறைவடையும் நிலையில், அதற்கடுத்து என்ன செய்யப்போகிறோம் என்பது பற்றி திட்டம் தயாரிக்காமல் மத்திய அரசு இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள  நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,390 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணைச்செயலாளர் லாவ் அகர்வால் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,390 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 1273 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைவோர் விகிதம் 29.36 சதவிகிதமாக உள்ள நிலையில், இதுவரை மொத்தம் 16,540  பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.  கொரோனா பாதிப்புக்காக 37,916 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைரசுடன் நாம் வாழப் பழகிக்கொள்ள வேண்டும்.  கொரோனா வைரஸ் தடுப்பு வழிமுறைகளை நாம் வாழ்க்கை முறை மாற்றங்களாக மாற்றிக்கொள்ள வேண்டும்” எனக் கூறினார். 

;