tamilnadu

img

ஒரு மணி நேரத்திற்கு ரூ.90 கோடி சம்பாதிக்கும் அம்பானி..!

புதுதில்லி:
உலகப் பெரும்பணக்காரர்கள் பட்டியலை, ‘ஹுருன் இந்தியா’ (Hurun India)நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில், இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரான முகேஷ்அம்பானி உலக அளவில் 5-ஆம் இடத்தைப் பிடித்துள்ளார். 
‘ஹூருண் இந்தியா’ வெளியிடும் பணக்காரர் பட்டியலில் முகேஷ் அம்பானிதொடர்ந்து 9 ஆண்டுகளாக இடம்பெற்று வருவதாகவும், இந்தக் காலத்தில் அவருடைய சொத்து மதிப்பு 2 லட்சத்து 77 ஆயிரத்து 700 கோடியில் இருந்து, ரூ. 6 லட்சத்து58 ஆயிரத்து 400 கோடியாக உயர்ந்துள் ளதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது. அத்துடன், முகேஷ் அம்பானி ஒவ்வொருமணி நேரத்திற்கும் ரூ. 90 கோடி சம்பாதிப்பதாகவும் ‘ஹூருண்’ நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.