கடந்த 2019 ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் 2020 ஜூனில் பணியமர்த்தல் நடவடிக்கைகள் 44 சதவிகிதம் சரிந்துள்ளதுஎன்று வேலைவாய்ப்பு தேடல் இணையதளமான ‘நாக்ரி காம்’ கூறியுள்ளது. அதேநேரம் 2020 மே மாதத்தைக் காட்டிலும் ஜூன் மாதத்தில் பணியமர்த்தல் நடவடிக்கைகள் 33 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.