tamilnadu

img

இந்திய நிறுவனங்களில் 20% ஆட்குறைப்பு இருக்கும்... வர்த்தகம் - தொழிற்துறை கூட்டமைப்பு சொல்கிறது

புதுதில்லி:
கொரோனாவால் மாறிவரும் வணிக சூழல் காரணமாக, இந்தியாவில் 10 முதல் 20 சதவிகிதம் வரைபணிக்குறைப்பு இருக்கலாம் என்று இந்திய வர்த்தகமற்றும் தொழில்துறை கூட்டமைப்பு (Ficci) கூறியுள்ளது.

கொரோனா பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டநாள் முதலே, இந்தியாவில் ஆட்குறைப்பு, சம்பளகுறைப்பு, பணி நீக்க நடவடிக்கைகளில் நிறுவனங்கள் இறங்கி விட்டன. லட்சக்கணக்கானோர் தங்களின் வேலை மற்றும் வருவாயை இழந்து வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர்.இந்நிலையில், நாஸ்காம் (Nasscom) சிக்கி (SCIKEY) ஆகிய நிறுவனங்கள் நடத்திய ஆய்வு அடிப்படையிலான அறிக்கை வெளியாகியுள்ளது.இந்த அறிக்கையில்தான், “கொரோனாவுக்கு பிந்தைய வணிகச் சூழல் காரணமாக, ஆட்டோமேஷன், டிஜிட்டல், கிக் எனப்படும் தற்காலிக தொழில்சார் பொருளாதாரத்தின் கீழ் இருக்கும் உற்பத்தித் துறையில் உள்ள சுமார் 5 முதல் 10 சதவிகித ஊழியர்கள் அதிக வாய்ப்புகளை பெறுவர் என்றாலும், பரவலாக 10 முதல் 20 சதவிகிதம் வரைவேலை குறைப்புகளும் இருக்கலாம்” என்று ஃபிக்கிகூறியுள்ளது.“குறிப்பாக, ஆட்டோமொபைல் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் 10 முதல் 15 சதவிகிதம் வேலை குறைப்புகள் இருக்கலாம். ஜவுளி மற்றும்ஆடைத்துறைகளில் 15 முதல் 20 சதவிகிதம் வரைஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படலாம்” என்று ஃபிக்கி குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, ஜூன் காலாண்டில் புதிய வேலை வாய்ப்புகள் 6.73% குறைந்துள்ளதாக வர்த்தகத் தளமான ‘சிக்கி’ (SCIKEY) கூறியுள்ளது.“புதிய பணியமர்த்தலுக்கான நிச்சயமற்ற சூழலில், நிறுவனங்கள் ஊழியர்களை பணி நீக்கம்செய்யவோ அல்லது சம்பளத்தை குறைக்க வேண் டிய கட்டாயத்தில் இருந்து வருகின்றன. அதோடு பல நிறுவனங்களில் புதிய பணியமர்த்தலையும் தள்ளிவைத்து வருகின்றன. ஆகவே இந்த நிச்சயமற்ற சூழலை நிர்வகிப்பதற்காக புதிய திறன் கொண்ட ஊழியர்கள் தேவைப்படுகின்றனர். ஐடி துறை ஊழியர்கள்மற்றும் இன்ஜினியர்கள், விற்பனை, செயல்பாடு மற்றும் மேலாண்மை வல்லுநர்கள், மனிதவள நிர்வாகஊழியர்கள் உள்ளிட்டோருக்கு இந்த காலகட்டத்தில் அதிக தேவை இருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது” என்று ‘சிக்கி’ குறிப்பிட்டுள்ளது.இதேபோலவே, நாஸ்காம் நிறுவனமும், “திறன் வாய்ந்த ஊழியர்களுக்கு தேவை அதிகரிக்கலாம். 2022-ஆம் ஆண்டளவில் குறைந்தபட்சம் 50 சதவிகிததொழிலாளர்கள் வாகனத்துறையில் மாற்றப்பட்ட திறன் தொகுப்புகளுடன் இருப்பர். ஜவுளி துறை மற்றும் ஆடைகள் துறையிலும் 40 சதவிகிதம் வரையில்மாற்றப்பட்ட திறன் தொகுப்புகளுடனும் ஊழியர்கள்இருப்பார்கள் என்று தெரிவித்துள்ளது. 

இந்தியா போன்ற ஒரு தொழிலாளர் உபரி நாட்டில், இதுபோன்ற மாற்றம், வழக்கமாகி விட்டால், போதிய வேலைவாய்ப்பு, அதிக முறைசாரா வேலைகள் மற்றும் ஒழுங்கான வேலைகள் இன்றி, அது தொழிலாளர் சந்தையில், எதிர்மறையான மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் ‘நாஸ்காம்’ எச்சரித்துள்ளது.

;