tamilnadu

img

கொரோவிலிருந்து மீண்ட 105 வயது மூதாட்டி... கேரள சிகிச்சை முறைக்கு மற்றொரு பெருமை

கொல்லம்:
கேரளத்தின் கோவிட் சிகிச்சை முறைக்கு பெருமையளிக்கும் வகையில் 105 மூதாட்டி ஒருவர் குணமடைந்துவீடு திரும்பியுள்ளார். கொல்லம் பாரிப்பள்ளி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் அஞ்ஞல்பகுதியைச் சேர்ந்த அஸ்ம பீவிதான்அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியவர். இவர்தான் கேரளத்தில் மிகவும்அதிக வயதுடன் கோவிட் சிகிச்சை பெற்றுகுணமடைந்தவராவார். கோட்டயம் மருத்துவக் கல்லூரியில் 93, 88 வயதுள்ள முதிய தம்பதியர் ஏற்கனவே சிகிச்சை பெற்று குணமடைந்தனர். 

அஸ்மாவுக்கு அவரது மகளிடமிருந்து நோய் தொற்றியது. ஜுலை 20 இல்கோவிட் தொற்றுடன் மருத்துவமனை வந்தவருக்கு காய்ச்சலும் இருமலும்உள்ளிட்ட கோவிட் அறிகுறிகள் காணப் பட்டன. அதோடு முதுமையாலும் ஏற்படும் சிரமங்களும் உண்டு. சுகாதார ஊழியர்களுக்கு இது சவாலாக அமைந்தது. சிறப்பு மருத்துவக்குழு அமைத்து அவருக்கான சிகிச்சை ஒருங்கிணைக்கப்பட்டது. அன்றாடம்இவரது உடல்நிலையை மருத்துவக் குழு தீவிரமாக கண்காணித்து சிகிச்சைஅளித்து வந்தனர். பலமுறை அவர் ஆபத்தான நிலைக்கு சென்றபோதிலும் சரியான சிகிச்சை மூலமும், நோயாளியின் மனதிடத்தாலும் விரைவாக உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு கோவிட் இல்லை என ஆய்வில் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அவர் வியாழனன்று மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு புறப் பட்டு சென்றார். கோவிட் நோய் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த 105 மூதாட்டி ஒருவர் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளதை அச்சத்துடன் சிகிச்சை பெற்று வருவோர் முன்னுதாரணமாக கொள்ள வேடும் என சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜாகூறினார்.

;