tamilnadu

அந்தமானில் 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம்...

போர்ட்பிளேர்:
அந்தமான் நிகோபார் தீவில் கேம்ப்பெல் பே பகுதியில் இருந்து 510 கி.மீ. தொலைவில் திங்களன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1  ஆக பதிவாகி உள்ளது. நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நில நடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.