tamilnadu

img

பாஜகவை விளாசிய உதித்ராஜ்

புதுதில்லி:

கடந்த 2014-ஆம் ஆண்டு வடமேற்கு தில்லியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெற்றவர் உதித்ராஜ். தற்போது அவர் காங்கிரசில் இணைந்துள்ளார்.


இந்நிலையில், செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்துள்ள உதித்ராஜ், பாஜக-விலுள்ள தலித் தலைவர்கள், வாய்மூடி, காதுகளைப் பொற்றிக்கொண்டு இருந்தால், அவர்கள் பாஜக-வில் எந்த பதவியையும் அடையலாம்; ஏனென்றால் பாஜக-வுக்கு தேவை தலித் வாக்குகள்தானே தவிர, தலித் தலைவர்கள் அல்ல என்று விமர்சித்துள்ளார். பாஜக-வும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் தலித்துக்களுக்கு ஆபத்தானவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.