புதுச்சேரி, ஆக. 5- படுக்கை வசதி தட்டுப்பாட்டை போக்க தனி யார் மருத்துவக் கல்லூரிகளில் 900 படுக்கை வசதி ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுவையில் கடந்த 4 மாதத்தில் அதிகபட்ச மாக புதன்கிழமை (ஆக.5) 286 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 109 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 7 பேர் தொற்றால் பாதிக் கப்பட்டு உயிரிழந்தனர். தனியார் மருத்து வக் கல்லூரி நிர்வாகிகளை அழைத்து பேசி உள்ளோம். அப்போது, 4 தனியார் மருத்துவ கல்லூரியில் தலா 100 படுகைகள் வீதம் ஏற்பாடு செய்வதாக தெரிவித்துள்ளனர். அதேபோல், அறுபடை மருத்துவக் கல்லூரியில் 400 படுகை கள் கேட்டோம். அதில் 300 படுகைகளை வழங்கு வதாக ஏற்றுக் கொண்டுள்ளனர். தற்போது அங்கு 50 படுகைகள் உள்ளன.
இன்னும் 250 படு கைகளை 5 நாட்களுக்குள் ஏற்பாடு செய்வ தாக தெரிவித்துள்ளனர். லட்சுமிநாராயணா மருத்துவக் கல்லூரியில் தற்போது 60 படுக்கைகள் உள்ளன. அங்கு மேலும் 140 படுக்கைகள் ஏற்பாடு செய்வதற்கு 5 நாட்கள் கேட்டுள்ளனர். இதன் மூலம் 6 மருத்துவக் கல்லூரியில் 900 படுகைகள் கிடைக்கும். கொரோனா நோயாளிகளில் உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பவர்களை இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஜிப்மரிலும் மற்றவர்களை தனியார் மருத்துவக் கல்லூரி களிலும் அனுமதிக்கப்படுகின்றனர். அதில் சிறப்பு மருத்துவர்கள், செவிலியர் கள், சுகாதாரப் பணியாளர்கள் இருப்பார்கள். வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளி களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் உடனே சென்று சிகிச்சை அளிப்பார்கள். கடுமை யாக பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளை மருத்துவமனையில் சேர்ப்பார்கள். இதற்காக 6 ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஏற்பாடு செய் யப்பட்டுள்ளது. தனியார் மருத்துவக் கல்லூரிகள் இது வரை சாப்பாடு உள்ளிட்ட எதற்கும் அரசிடம் பணம் கேட்கவில்லை. தனியார் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளி களுக்கு ஒரு நாள் உணவுக்காக 200 ரூபாய் அரசு வழங்கும். அதேபோல் மருத்துவர் மற்றும் செவிலியர்களுக்கு தேவை யான பிபி கிட்ஸ் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்குவதற்கும் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.