tamilnadu

திருவாரூர், கரூர், தஞ்சாவூர் முக்கிய செய்திகள்

டாஸ்டாக் கடையை அடைத்து ஆர்ப்பாட்டம்

திருத்துறைப்பூண்டி, ஆக.26- திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் டாஸ்மாக் ஊழியர்கள் சங்கத்தின்(ஏஐடியுசி) சார்பில் பல்வேறு கோரி க்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடையை அடைத்து கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  டாஸ்மாக் ஊழியர்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்க வேண்டும். மேலும் கொரோனா பாதித்த பகுதிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட ஏராளமான கோரிக்கைகளை வலியறுத்தி ஏஐடி யுசி டாஸ்மாக் சங்கத்தின் சார்பில் மாவட்ட தலைவர் லெனின் தலைமையில், மாநிலச் செயலாளர் இளங்கோவன் மற்றும் ஊழியர்கள் புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அடைத்து கண்டன ஆர்பாட்டத்தில் ஈடு பட்டனர்.  இதற்கு முன்னதாக காலை 10 மணிக்கு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டு கடையை மூடியதால் அரை மணி நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


தலித் மக்களின் மயானத்தைஆக்கிரமித்த தனியார் நிறுவனம்

கரூர், ஆக.26- கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டம், சாந்தப்பாடி அருகே உள்ள கரியஞ்செட்டிவலசு கிராமத்தில் தலித் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பயன்படுத்தி வரும் மயா னத்தை தனியார் நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்து காற்றாழை மின்சாரம் தயாரிக்க பணிகளை மேற்கொண்டு வருகின்றது.  இதனால் அதிர்ச்சியடைந்த தலித் மக்கள், துவக்கப்ப ட்டுள்ள பணிகளை உடனடியாக நிறுத்திடவும், மயான நில த்தை மீட்டு தலித் மக்களுக்கே திரும்ப வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனுவை தலித் விடுதலை இயக்க த்தின் சார்பில் அரவக்குறிச்சி  வட்டாட்சியரிடம் வழங்கினர்.


3 சக்கர ஸ்கூட்டி வழங்க கோரிக்கை

தஞ்சாவூர், ஆக.26- தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் ஒன்றியம் நெய்வேலி வடபாதி, தென்பாதியில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்தி றனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க த்தின் புதிய கிளை அமைப்புக் கூட்டம் ஊராட்சி மன்றத் தலை வர் எம்.கே.பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.  கிளைத் தலைவராக ஜி.தில்லையம்மாள், துணைத் தலை வராக செல்வராஜ், செயலாளராக பெரியநாயகி, துணைச் செயலாளராக போத்தியப்பன், பொருளாளராக கிருஷ்ண மூர்த்தியும் தேர்வு செய்யப்பட்டனர். தமிழக அரசால் இலவ சமாக வழங்கப்படும் மூன்று சக்கர மோட்டார் வாகனத்தை தகு தியான அனைத்து நபர்களுக்கும் வழங்க வேண்டும் என தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது.


 

;