tamilnadu

கொரோனா கால சிறப்பு நிதி கோரி புதுச்சேரியில் தலித் மக்கள் போராட்டம்

புதுச்சேரி, மே 30- தலித் மக்களுக்கு கொரோனா கால சிறப்பு நிதி  வழங்கக் கோரி முதல்வ ருக்கு இணையதளம் மூலம்  மனு அனுப்பும் போராட்டம் புதுச்சேரியில் நடைபெற்றது. கொரோனா தொற்று நோய் பரவலை தடுக்க மத் திய மாநில அரசுகளால் அமல்படுத்தப்பட்டுள்ள பொதுமுடக்கத்தால் தலித்  மக்கள் வாழ்வாதாரம் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பல்வேறு அரசுத்  துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட தலித் மக்களின் சிறப்பு கூறுநிதியினை செலவு செய்யாமல் உள்ளனர்.  எனவே சிறப்புக்கூறு நிதி யில் இருந்து  பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு  கொரோனா கால சிறப்பு  நிதி வழங்க வேண்டும். புதுச் சேரி அரசு மின்துறையை தனி யார்மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும். தலித்  மக்களுக்கு கிடைக்க கூடிய இடஓதுக்கீட்டை பறிக்கும் பொதுத்துறை நிறு வனங்களை தனியார்மய மாக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியு றுத்தி புதுச்சேரி முதல்வ ருக்கு இமெயில் மூலம் மனு  அனுப்பும் போராட்டம் நடை பெற்றது. தீண்டாமை ஒழிப்பு முன்  னணியின் புதுச்சேரி பிர தேசக்குழு சார்பில் சனிக்  கிழமை (மே 30) நடைபெற்ற  போராட்டத்தில் தலைவர்  நிலவழகன், பொதுச்செய லாளர் ராமசாமி, பொருளா ளர் ரமேஷ், மாநிலக்குழு உறுப்பினர் சரவணன், நிர்வா கிகள் வீர.அரிகிருஷ்ணன், இராச.செயராமன், இராம் கோபல், தட்சணாமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;