tamilnadu

img

புதுச்சேரி மத்திய பல்கலை.யில் தேர்வு, கல்வி கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்

புதுச்சேரி:
புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகம் மற்றும்  அரசு கல்லூரி மாணவர்களின் தேர்வு மற்றும் கல்வி கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று முதலமைச்சருக்கு இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் தலைவர் ச.ஜெயபிரகாஷ், செயலாளர் கு.விண்ணரசன் ஆகியோர் முதலமைச்சர் நாராயணசாமிக்கு எழுதியிருக்கும் கடிதத்தின் விபரம் வருமாறு:-கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 75 நாட்களாக நடைமுறையில் உள்ள ஊரடங்கினால் பொருளாதார ரீதியாகவும், வாழ்வாதாரத்தை இழந்தும், வருமானம் இன்றியும் நாட்டு மக் கள் பெரும் துயரத்தில் உள்ளனர்.இச்சூழலில் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் மற்றும் உயர்கல்வித்துறை கடந்த வாரம்
பல்கலைக் கழக உறுப்பு கல்லூரி மாணவர்கள் ஜூன் 8 ஆம் தேதி முதல் தாங்கள் படித்த கல்லூரிகளில் தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் ஜூலை மாதம் தேர்வுக்கான அட்டவணையையும் வெளியிட்டுள்ளது.அதேபோன்று தனியார் கல்வி நிறுவனங்களும் அரசின் உத்தரவை  மீறி மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் கல்வி கட்டணம் மற்றும் ஓடாத பேருந்துகளுக்கும் கட்டணம் கட்டச்சொல்லி நிர்ப் பந்தித்து வருகிறார்கள்.இந்த மாதம் 8ஆம் தேதி நடந்த  செய்தியாளர்கள் சந்திப்பின் போது, மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை பாதிக்கும் கல்வி கட்டணம் தொடர்பாக பள்ளிகளுக்கு ஓய்வு பெற்ற நீதியரசர் அக்பர் அலி தலைமையில் நிர்ணயித்த கல்வி கட்டணத்தையே பள்ளிகள் வசூலிக்க வேண்டும்.

பல்கலைக்கழக துணை வேந்தரிடம் தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்று தாங்கள் (முதலமைச்சர்) பல்கலைக்கழகத்துக்கு கோரிக்கை வைத்ததையும், பல்கலைக்கழக துணை வேந்தரும் தங்களின்  கோரிக் கையை ஏற்று மாணவர் நலன் கருதி இறுதி ஆண்டை தவிர மற்ற தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதை இந்திய மாணவர் சங்கம் புதுச் சேரி பிரதேச குழு வரவேற்கிறது.புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகம் மற்றும் மாநில அரசு கல்லூரிகளில் பயிலும் இறுதி ஆண்டு மாணவர்களின்  தேர்வு கட்டணம் மற்றும் அனைத்து மாணவர்களின் நடப்பு கல்வி ஆண்டு கல்வி கட்டணத்தை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும்.புதுச்சேரி பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு தேர்வுகள் ரத்து  குறித்த அறிவிப்புகள் இறுதி ஆண்டு மாணவர்கள்  மற்றும் பெற்றோர் மத்தியில் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. இக்குழப்பங்களுக்கு புதுச்சேரி உயர்கல்வித் துறை பல்கலைக்கழகத்தோடு கலந்து பேசி உரிய தீர்வு காண வேண்டும்.தனியார் பள்ளிகளுக்கு புதுச்சேரி அரசு நிர்ணயித்த கட்டணங்களை பொது மக்களுக்குவெளிப்படைத் தன்மையுடன் வெளியிட்டு, அரசு உத்தரவுகளை மீறி அடாவடித்தனமாக பெற்றோர் களிடம் கல்வி கட்டணம் கட்டச் சொல்லி நிர்பந்திக்கும் தனியார் கல்வி நிறுவனங்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.இந்த கடிதத்தை கல்வி அமைச்சர், மத்திய பல்கலைக் கழக துணைவேந்தர், உயர் கல்வித்துறை இயக்குனர் ஆகியோருக்கும் அனுப்பி வைத்துள் ளனர்.

;