ஒடிசாவில் உள்ள தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணத்தை தள்ளுபடி செய்ய அம்மாநில அரசு புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
கொரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக மார்ச் 2020 முதல் பள்ளிகள் மூடப்பட்டது. இதையடுத்து நடப்பாண்டுக்கான கல்விக் கட்டணத்தை தனியார் பள்ளிகள் தள்ளுபடி செய்ய வேண்டும் என ஒடிசா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த காலத்திற்கான கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.
இந்நிலையில் ஒடிசா அரசு இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
கொரோனா பொதுமுடக்க காலத்தில் பள்ளிகள் மூடப்பட்ட நாள்களுக்கான கட்டணத்தை தள்ளுபடி செய்யுமாறு தனியார் பள்ளிகளுக்கு அம்மாநில கல்வித்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் ஒடிசா மாநிலத்தில் ஜனவரி 8ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது