tamilnadu

உதவித் தொகை, அத்தியாவசியப் பொருட்களை வழங்க வேண்டும் புதுச்சேரி அரசுக்கு சிபிஎம் வேண்டுகோள்

புதுச்சேரி, மார்ச் 23 - பேரிடர் காலங்களில் நிதி உதவி வழங்குவதை போல, உதவி தொகை, அரிசி மற்றும் அத்தியாவசியப் பண்டங்களை உடனே வழங்க புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என  மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து கட்சியின் பிரதேசச் செய லாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை  வருமாறு:- உலகம் முழுவதும் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்தியாவிலும், மத்திய - மாநில அரசுகளால் எச்சரிக்கை நடவடிக்கை கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கேரள மாநில இடது முன்னணி அரசாங்கம் பல முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொண்டு  நாட்டிற்கே முன்மாதிரியாகத் திகழ்கிறது.  புதுச்சேரி மாநிலத்திலும் 22 ஆம் தேதி முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. பின்னர் மார்ச் 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் கூட்டம் சேராமல் தங்களை தனிமைப் படுத்திக் கொள்வதன் மூலம் தொற்று நோய் பரவும் சங்கிலியை உடைக்க முடியும். ஆனால், அன்றாடம் வேலை செய்து பிழைக்கும் ஏழை எளிய மக்கள், அமைப்புச் சாரா தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள், தினக்கூலிகள், கிராமப்புற விவசாய தொழிலாளர்கள்  எப்படி தங்கள் வாழ்க்கைத் தேவைகளை சமாளிக்க முடியும்? எனவே புதுச்சேரி அரசு இத்தகைய சூழலில் உதவித் தொகை, இலவச அரிசி,  முதியோர், விதவை பென்சன் தொகையை முன்பணமாக அளிப்பது மிகவும் உதவிகர மாக இருக்கும்.  இதைப் போர் கால நடவடிக்கையாக மேற்கொள்ள வேண்டும்.  பேரிடர் காலங்களில் சிறப்பு உதவிகள் வழங்குவது போல் இச்சூழ்நிலையிலும் அளிக்க வேண்டும். முதல்வர் ஏற்கனவே அறிவித்த   ரூபாய் ஆயிரத்தை அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு வழங்கினால் மிகவும் உதவிகரமாக இருக்கும். மேலும் துப்புரவு பணியாளர்களுக்கு முகக்கவசம், கையுறை களை தேவையான அளவு வழங்க வேண்டும். உலக சுகாதார நிறுவனத்தின் அறி வுறுத்தலின்படி தற்காப்பு நடவடிக்கையாக வெகுஜன சோதனைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இதில் புதுச்சேரி யில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையுடன்,  தனியார் மருத்துவக் கல்லூரிகளும் ஈடுபடுத்தப் பட வேண்டும். இதற்கான கட்டமைப்பு வசதிகளை உடனடி யாக ஏற்படுத்த வேண்டும். மைய்யப்படுத் தப்பட்ட ஒருங்கிணைந்த நோய் கட்டுப் பாட்டுக்கான அரசு மையத்தை உடனடியாக உருவாக்க வேண்டும். அவசர கால நடவடிக்கைகளுக்கு பொது மக்களும் ஒத்துழைப்புத் தரவேண்டும்.  இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;