கடந்த பிப்ரவரியில் வடகிழக்கு டெல்லியில் நடத்த வன்முறை தொடர்பாக பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
டில்லி கலவரத்தில் பங்கேற்றதாக நீதிமன்ற காவலில் உள்ள முன்னாள் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர், ஜே.எம்.யூ மாணவர் உமர் காலித் வியாழக்கிழமை எங்கும் வெளியேறவோ, யாரையும் சந்திக்கவோ அனுமதிக்கப்படவில்லை என நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், சிறையில் அடைக்க வேண்டும் என்ற உத்திரவு காரணமாக, உடல் நீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தலாக உணர்வதாக கூறியுள்ளார். பின்னர் நீதிமன்ற சிறை கண்காணிப்பாளர் வரவழைத்து இது தொடர்பாக விசாரணை வெள்ளியன்று வெளியிட்டது. ஜே.என்.யூ மாணவர் தனது "கருத்தியல் வேறுபாடுகள் மற்றும் கருத்து வேறுபாடு" காரணமாக போதுமான பாதுகாப்பைக் கோரி தாக்கல் செய்யப்பட்டது. அக்டோபர் 17 ஆம் தேதி காலித் அவர்களுக்கு போதிய பாதுகாப்பை காவல்துறையினர் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
தில்லி நீதிமன்றம் செப்டம்பர் 24 முதல் அக்.,22 வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். இன்று காவலின் முடிவின், காலித்தை ஒரு மாதம் நீதிமன்ற காவலில் வைக்க காவல்துறை மனு தாக்கல் செய்துள்ளனர்.