tamilnadu

புதுச்சேரியில் மதுபான கடைகளை மூட வேண்டும்: சிபிஎம் வலியுறுத்தல்

புதுச்சேரி,மார்ச் 18 - கொரோனா தொற்று பரவாமல் தடுக்க புதுச்சேரி யில் மதுபானக் கடைகளை மூட அரசு உத்தரவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத் தியுள்ளது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேசச் செய லாளர் ராஜாங்கம் வெளி யிட்டுள்ள அறிக்கை வரு மாறு:- உலகத்தையே அச்சு றுத்தி வரும் கொரோனா தொற்றுநோய் எதிர்த்து புதுச்சேரி அரசு பல்வேறு நட வடிக்கைகளை எடுத்து வருகிறது. அரசின் அனைத்து நடவடிக்கைகளையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. மேலும் மார்க்ச்சிஸ்ட் கட்சியின் ஊழியர்களை அரசின் தடுப்பு பணியில் ஈடுபடுமாறும், விழிப்புணர்வு பிரச்சாரத் தில் ஈடுபடவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.
மாநாடு ஒத்திவைப்பு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மார்ச் 20 ஆம் தேதி புதுச்சேரி கம்பன் கலை யரங்கத்தில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு நடை பெறுவதாக இருந்தது. இதில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ்காரத் பங்கேற்க இருந்தார். புதுச்சேரி அரசின் வேண்டுகோளை ஏற்று, மக்களின் பாதுகாப்புகருதி இந்த மாநாடு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் பொழுதுபோக்கு கூடங்கள், வணிக வளா கங்கள், திரையரங்குகள், கல்விநிலையங்களில் கூட்டம் கூடுவதை தடுக்கும் வகையில் மார்ச் 31 வரை அரசுவிடுமுறை விடும் படி உத்தரவிட்டுள்ளது.  இந்நிலையில் மதுபான கடைகளை மட்டும் திறந்து வைத்திருப்பது ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே, மக்களின் நலனை கருதி மதுபான விடுதிகளையும், கடைகளையும் மூடுவதற்கு அரசு உடனடியாக உத்தர விட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;