tamilnadu

img

இங்கிலாந்து நாட்டுக்கு ஓடும் இந்திய முதலீட்டாளர்கள்

புதுதில்லி:

பிரதமர் மோடியின் தோல்வியடைந்த திட்டங்களில், ‘மேக் இன் இந்தியா’ திட்டமும் ஒன்றாகும். இத்திட்டத்தின்படி வெளிநாட்டு நிறுவனங்களை, இந்தியாவுக்கு கொண்டுவரப் போவதாக மோடி கூறினார். ஆனால், மோடி ஊர் ஊராய்ச் சுற்றியும் ஒருவர் கூட வரவில்லை.


மாறாக, இந்திய நிறுவனங்கள் பல வெளிநாடுகளுக்குச் சென்றதுதான் நடந்தது. அதற்கு உதாரணம்தான், 2018-ஆம் ஆண்டில் இந்திய முதலீட்டாளர்களின் அதிகளவிலான முதலீடுகள் இங்கிலாந்து நாட்டின் லண்டனுக்கு சென்றிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தியாகும்.2018-ஆம் ஆண்டில், துபாய், சிங்கப்பூர் உள்ளிட்ட நகரங்களைக் காட்டிலும் இங்கிலாந்தில் கூடுதலான அளவில் இந்தியர்கள் முதலீடுகளை மேற்கொண்டுள்ளனர் என்று லண்டன் - பார்ட்னர்ஸ் நிறுவனத்தின் ஆய்வறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.


‘2018-ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் இந்தியர்கள் மேற்கொண்ட ஒட்டுமொத்த அந்நிய நேரடி முதலீட்டில் 60 சதவிகிதம் அளவுக்கு லண்டனில் மட்டும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த ஆண்டில் லண்டனில் மட்டும் 32 முதலீடுகள் இந்தியர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது; இந்தியர்களுடைய அந்நிய நேரடி முதலீடு கடந்த ஒரே ஆண்டில் மட்டும் லண்டனில் 255 சதவிகித வளர்ச்சியும், ஒட்டுமொத்தமாக இங்கிலாந்தில் 100 சதவிகித வளர்ச்சியும் கண்டுள்ளது.


கடந்த 10 ஆண்டுகளாகவே இந்தியர்கள் இங்கிலாந்தில் முதலீடு செய்வது மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. கிட்டத்தட்ட 2.49 பில்லியன் பவுண்டுகளை இந்தியர்கள் இங்கிலாந்தில் மூலதன முதலீட்டுக்காக செலவிட்டுள்ளனர். இதன்மூலம் 5,691 வேலைகள் இங்கிலாந்தில் உருவாக்கப்பட்டுள்ளன” என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


;